உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் நிலத்திற்கு இழப்பீடு: தவறினால் தலைமைச் செயலர் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்திற்கு இழப்பீடு: தவறினால் தலைமைச் செயலர் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வாகன நிறுத்துமிடத்திற்காக கோயில் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.25 கோடியை ஆக. 13 க்குள் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய வேண்டும். ]தவறினால் தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும் என அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை ஒத்தக்கடை கோதண்டராமசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே உள்ளது. அதை உயர்நீதிமன்றத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய இடமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது.ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'நிலத்தை நீதிமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்த இழப்பீடாக ரூ.25 கோடியை கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டும். இத்தொகையை உயர்நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு,'இழப்பீட்டிற்குரிய நிதி ஒதுக்கீடு பணி பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அவகாசம் தேவை,' என தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நிதி ஒதுக்குவதில் இரண்டரை ஆண்டுகளாக தாமதம் ஏன். இது துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றத்திற்கு உதவுவதை அரசு சுமையாக கருதுகிறதா. ஆக.13 க்குள் ரூ. 25 கோடியை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய வேண்டும். தவறினால் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !