உள்ளூர் செய்திகள்

கணினி பயிற்சி

மதுரை: மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர் விடுதியில், சென்னை ஏ.சி.எஸ்.ஏ., அம்மன் அறக்கட்டளை சித்திர லேகா, அசோகன் சார்பில் 34 மாணவர்களுக்கு ஓராண்டு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டது. அன்னை இன்ஸ்டிடியூட் பயிற்சியாளர்கள் சாந்தி, சங்கீதா பயிற்சியளித்தனர். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராஜம்மாள் ஒருங்கிணைத்தார். முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்கள் பிரவீன் குமார், சசிகுமார், ஹர்ஷித் ஆகியோருக்கு கணினி ஆசிரியர் முத்துராமன் பரிசு வழங்கினார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அகில இந்திய ஹரிஜன சேவக சங்க தமிழக கிளை செயலாளர் சீனிவாசன் சான்றிதழ் வழங்கினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !