உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்

ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்

மதுரை: மதுரை மாநகராட்சியில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய வடிகால்களை புனரமைத்தல் தொடர்பாக ஏப்.23 ல் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் புனரமைப்பது தொடர்பாகவும் ஐதராபாத் தனியார் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை செயல்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் ஏப்.23 மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. எனவே மக்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் தெரிவிக்க பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி