உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு

நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு

மதுரை: மதுரை வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸிடம், தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி, மாவட்ட தலைவர் ஜீவானந்தம், நிர்வாகிகள் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு கொரோனா காலத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை மூன்றாண்டுகளை கடந்தும் கிடைக்கவில்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் வழங்க ஏதுவாக நிலுவையை விடுவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை