உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடக்காத கவுன்சில் கூட்டம்; நெருக்கடி கொடுக்க திட்டம்! மாநகராட்சியை தி.மு.க., முடக்குவதாக கூறி போராட்டம்

நடக்காத கவுன்சில் கூட்டம்; நெருக்கடி கொடுக்க திட்டம்! மாநகராட்சியை தி.மு.க., முடக்குவதாக கூறி போராட்டம்

மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான சொத்துவரி முறைகேடு விவகாரத்திற்கு பின் முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் மேயர், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்த பதவிகள் காலியாகவே உள்ளன. மண்டலக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளன. நிர்வாகம், மாநகராட்சி வார்டுகள் செயல்பாடுகள் முடங்கி வருகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இப் பிரச்னையை அரசி யலாக்க அ.தி.மு.க., முடிவு செய்து, தொடர் போராட்டங்களை நடத்தி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்து உள்ளது. இதன்படி மதுரையில் டிச.16ல் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளது. மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறிய தாவது: மூன்று மாதங்களாக மாநகராட்சி முடங்கி கிடக்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட எந்த பிரச்னைக்கும் நடவடிக்கை எடுப்பதில்லை. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் சொல்வதை மட்டுமே அதிகாரிகள் கேட்கின்றனர். வாகன ஓட்டிகளின் இடுப்பு உடையும் வகையில் ரோடுகள் மோசமாகிவிட்டன. 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் இன்னும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வரவில்லை. மற்ற வார்டுகளில் 'லீக்கேஜ்' உள்ளிட்ட பிரச்னைகளும் உள்ளன. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். சொத்துவரி முறைகேடு போல் நகரமைப்பு பிரிவிலும் ரூ.பல கோடியில் முறைகேடு நடந்து உள்ளது. புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. சென்னை யில் நாளை (டிச.,10) அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு பின் நகர் செயலாளர் செல்லுார் ராஜூவுடன் மாநகராட்சி நிலவரம் குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமி யிடம் முறையிட உள்ளோம். அவரது ஆலோசனைப்படி மாந கராட்சிக்கு எதிராக மதுரையில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம். முக்கிய தலைவர்கள் பங்கேற்க வுள்ளனர் என்றார்.

மாமன்றக் கூட்டம் நடக்காத பின்னணி என்ன

சோலைராஜா கூறியதாவது: மேயர் இல்லாத சூழலில் துணைமேயர் நாகராஜன் தான் 'பொறுப்பு மேயராக' செயல்படுகிறார். அவர் மா.கம்யூ., கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கு கூட அழைப்பு விடுப்பதில்லை. துணைமேயர் தலைமையில் மாமன்றம் கூட்டத்தை நடத்த தி.மு.க., விரும்பவில்லை. ஒரே கூட்டணி என வெளியே பேசிக்கொண்டாலும் மறைமுகமாக தி.மு.க.,- மா.கம்யூ., க்குள் முட்டல் மோதல் வெடிக்கின்றன. முதல்வருடன் நெருக்கமாக உள்ள அக்கட்சி எம்.பி., வெங்கடேசன் கூட, துணைமேயர் நிலைமையை ஆளுங்கட்சி மேலிடத்திற்கு கொண்டு செல்லவில்லை. உள்ளூர் அமைச்சர்களை மீறி முதல்வரிடம் சென்றால் சட்டசபை தேர்தலில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு இருக்காது என எம்.பி.,யும் கண்டுகொள்வதில்லை. இதனால் தான் மாநகராட்சி கூட்டங்கள் நடக்கவில்லை. இதனால் பாதிப்பு மக்களுக்கு தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை