தம்பதி தற்கொலை
மதுரை : மதுரையில் குழந்தையில்லா ஏக்கத்தில்கண்மாய்க்கரையில் விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர்.மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் 68. இவரது இரண்டாவது மனைவி அழகுமுத்து 58. வாரிசு இல்லை. சமயநல்லுார் பகுதியில் அரிசி கடை நடத்தி வந்த தன்ராஜ், நேற்றுமுன்தினம் மனைவியை அழைத்துக்கொண்டு ஒத்தக்கடை அருகே இலங்கியேந்தல் ஊராட்சி சித்தாக்கூர் கிராமத்திற்கு வந்தார். அங்குள்ள களத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.குடும்ப பிரச்னை இல்லாத நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா என ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சிவபாலன் விசாரிக்கிறார்.