உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாடுபிடி வீரர்கள் பயிற்சி

மாடுபிடி வீரர்கள் பயிற்சி

அவனியாபுரம்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜன. 14ல் நடக்கிறது. அதற்காக காளையர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க காளைகளுக்கும், காளைகளை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி மேற்கொள்கின்றனர்.அங்கு 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். அவனியாபுரம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுகின்றனர்.வேகமாக நடத்தல், ஓட்டம், நீச்சல், மூச்சுப் பயிற்சி, இளவட்டகல் துாக்குதல், ஸ்கிப்பிங் பயிற்சிகளை நேற்றுமுன்தினம் முதல் வீரர்கள் துவக்கி உள்ளனர். பலர் வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்கும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ