உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்

தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்

மேலுார் : செம்மனிப்பட்டியில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் நெற் பயிர்கள் பதராகிப் போனதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.செம்மனிபட்டியில் பெரியாறு கால்வாய் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி நெல் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த அக்டோபரில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் கூத்தன் கண்மாயில் தண்ணீரை நிரப்பி நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் பதராகி விட்டது.விவசாயி சாகுல்ஹமீது: நுாறு நாட்களுக்கு முன் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டோம். அறுவடைக்கு 15 நாட்கள் உள்ள நிலையில் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நெற் பயிரில் பால்(அரிசி) பிடிக்காமல் பதராகி விட்டது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.428 வீதம் பயிர் காப்பீடு செய்துள்ளோம். அதனால் வேளாண், வருவாய், காப்பீடு துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !