உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

மதுரை: மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையால் 11 ஏக்கர் பரப்பிலான நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.குமலங்கலத்தில் அக். 25 ல் பெய்த மழையால் 15 முதல் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராகஇருந்த 5 ஏக்கர் பரப்பிலான நெல், வடுகபட்டியில் இரண்டரை ஏக்கர், வீரபாண்டியில் ஒரு ஏக்கர் நெல் மழையில் சாய்ந்தது. 6 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலுார் சருகுவலையப்பட்டியில் தேங்கிய மழைநீரால் ஒரு ஏக்கர் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது. அச்சம்பத்து பகுதியில் 3 ஏக்கரில் நடவு செய்து 10 நாளான நாற்றுகள் மூழ்கியதில் முழுமையாக சேதமடைந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை