உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

 தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் ஆபத்தான முறையில் தாழ்வாகச் செல்லும் உயர்மின்னழுத்த கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி தனலெட்சுமி கூறியதாவது: இங்குள்ள மேலத்தெரு ஒத்த வீடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தும், சாய்ந்தும் உள்ளன. உயர் மின்னழுத்த கம்பிகள் தொய்வடைந்துள்ளன. வீட்டின் வாசல் அருகே கையால் தொட்டுவிடும் துாரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. மழை, மின்னல் காலங்களில் தொடாமலேயே மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. காற்று அடிக்கும் போது வேகமாக அசைவதால் விபரீதம் விளையவும் வாய்ப்புள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி