உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்

தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே பெரியாறு பாசன கால்வாய் தடுப்பு சுவரில்லாத பாலத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் நகர் பகுதிக்கு குறவன்குளம் உள்ளிட்ட கிராமத்தினர் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். டூவீலர் மட்டுமே செல்லும் அளவிலான பழமையான பாலத்தின் தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரவில் விபத்து அபாயம் உள்ளது. இன்று வரை பராமரிக்கப்படாத பாலத்தின் தடுப்புச் சுவர் கற்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. செடி, மரங்கள் வளர்ந்து அச்சுறுத்துகின்றன, இந்த பாலம் கட்டிய போது கட்டிய பிற பாலங்கள் இடிந்து விழுந்து பராமரிக்கப்பட்டுள்ளன. இப்பாலம் எப்போது வேண்டுமானாலும் விழும். பழமையான பாலத்தை அகற்றி புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை