ரூ.8 லட்சம் குளோரின் கொள்முதல் செய்ய முடிவு
மேலுார் : மேலுாரில் தலைவர் முகமது யாசின் தலைமையில் நகராட்சி கூட்டம் நடந்தது.இதில் 27 வார்டுகளில் உள்ள 24 மேல்நிலை தொட்டிகளில் குளோரின் கலந்து குடிநீர் சப்ளை செய்ய ரூ.8 லட்சத்தில் குளோரின் வாங்குவது, சீதக்காதி தெருவில் ரூ.2.50 லட்சத்தில் ஜி. ஐ.,பைப் மாற்றவும், ரூ. 14 லட்சத்தில் மழை நீர் வடிகால், புதிய தினசரி காய்கறி சந்தையில் ரூ. 20 லட்சத்தில் தற்காலிக கடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்தில் நகராட்சி அலுவலகத்தில் மழையினால் பழுதடைந்த கணினியை சரி செய்யவும், ரூ.6 லட்சம் செலவில் தற்காலிக பஸ்ஸ்டாண்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் இரும்பு மேடை அமைத்து பிளாஸ்டிக் தொட்டி மூலம் குடிநீர் வழங்குவது என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் முத்துக்குமார், எழுத்தர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.