உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அனைத்திந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோட்டத் தலைவர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாரியம் மூலம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுநர்களை மீண்டும் பணியமர்த்தக் கூடாது. அவர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி செயல் தலைவர் சிவக்குமார், முன்னாள் கோட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசினர். இணைச் செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை