ஆர்ப்பாட்டம்
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிப்பது போன்றும், மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்டித்தும், சிகிச்சைக்கு நோயாளிகளுடன் வரும் போதையில் உறவினர்களால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கவும், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணி பாதுகாப்பு வழங்ககோரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்தனர்.