மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோயில் திருவிழா
29-Mar-2025
மேலுார் : மேலுார் மில்கேட் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று சாலக்கரையான் ஊருணியிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பூத்தட்டு, முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று (மார்ச் 30) மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். பிறகு முளைப்பாரி கரைக்கப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.
29-Mar-2025