உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பக்தர்களே தோல் பையில் தண்ணீர் பீய்ச்சுங்கள்

 பக்தர்களே தோல் பையில் தண்ணீர் பீய்ச்சுங்கள்

அழகர்கோவில்: அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவின் போது தோல் பையில் தண்ணீர் பீய்ச்ச கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏப். 27 முதல் மே 6 வரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடக்கவுள்ளது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, அவரை குளிர்விக்க பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அப்போது அழகர் விக்ரகம், குதிரை வாகனத்தின் வண்ணம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அதிக விசை கொண்ட நீருந்துகள் மூலம் தண்ணீர் பீய்ச்சுவது, பிளாஸ்டிக் பைகளைக் கடித்து தண்ணீர் பீய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். விரத ஐதீகத்தின்படி, தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி, திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பீய்ச்ச வேண்டும் என பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி