தினமலர் செய்தியால் நிரம்பிய கண்மாய்
மேலுார்: மேலுாரில் நீர்வளத்துறை அலுவலகம் அருகே உள்ள மூங்கில் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை. அதனால் 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டு அதன் மூலம் பாசனம் பெறும் 700 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறையினர் தண்ணீர் திறந்ததால் மூங்கில் கண்மாய் நிரம்பி அதனை தொடர்ந்து பிற கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.