தினமலர் செய்தி அதிகாரிகள் ஆய்வு
மேலுார், : கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி பகுதிகளில் சில தினங்களாக பெய்த மழைக்கு அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் நீரில் மூழ்கியது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக துணை வேளாண்மை அலுவலர் தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்தனர்.