தினமலர் செய்தி: குழாய் அகற்றம்
மதுரை :குலமங்கலம் ரோடு எல்.ஐ.சி., காலனி முதல் தெரு அருகே நடுரோட்டில் குடிநீருக்கான வால்வு அரைகுறையாக அமைக்கப்பட்டது. ரோட்டின் மேல் குழாயின் ஒருபகுதி நீட்டிக்கொண்டிருந்தது.பள்ளிகள், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள அப்பகுதியில் தடுப்பு அரண், எச்சரிக்கை பலகை, சிவப்பு கொடியோ வைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையிருந்தது.இதுகுறித்து மே 14ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ரோட்டின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருந்த குழாயை வெட்டிய அதிகாரிகள் சாக்குத்துணி கொண்டு மூடி 'தற்காலிக தீர்வு' கண்டனர். பணி நடந்த இடத்தில் உள்ள கற்குவியலையும், வெட்டப்பட்ட குழாய் துண்டுகளையும் முறையாக அப்புறப்படுத்தி சிலாப் அமைக்க வேண்டும்.