மேலும் செய்திகள்
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு மையம்
18-Oct-2024
மேலுார் : செம்மினிபட்டி ஊராட்சி முத்துசாமிபட்டியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ.10 லட்சத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. அதன்பின்னர் அந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணானது. பொது மக்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இயந்திரம் உடனே சரி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் தினமலர் இதழுக்கு நன்றி கூறினர்.
18-Oct-2024