| ADDED : ஆக 14, 2011 03:41 PM
போக்குவரத்து தடை இல்லாமல் நீர்நிலைகளை கடக்க, ரோடுகளில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தரம் தான் கேள்விக்குறியாக உள்ளது. பணியை எடுத்து செய்யும் கான்ட்ராக்டர்கள், அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாரி இறைக்கும் கமிஷன் தான். ஒரு பாலம் அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்படும் போதே, ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து சதவீதத்திற்கு மேல் கமிஷன் தரப்படுகிறது. கான்ட்ராக்டர் தனது லாபத்தை அதிகமாக எடுத்துக்கொண்டு, 60 சதவீத தொகையில் தான் பணிகள் நடக்கின்றன. இதனால், தரமில்லாத பாலம் அமைகிறது. இந்த அவலம் அனைத்து துறைகளிலும் உள்ளதால், பாலங்களின் நிலை அந்தோ பரிதாபம் தான். பல பாலங்களில் தடுப்புசுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இரவில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வலுவிழந்த பாலங்களை அதன் ஆயுள் முடியும் முன்பே, புதுப்பிக்க அரசு முன்வருவதில்லை. இதனால் சேதமடைந்த நிலையிலேயே பாலங்கள் இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கமிஷனை எதிர்பார்க்காமல் இருந்தால், தரமான பாலங்கள் உருவாகும்.