பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை
மதுரை: வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது குறித்த ஒத்திகை மதுரை வடக்கு தாலுகா ஆனையூர் கண்மாயில் நடந்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆலோசனைபடி, அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 23 பேர், தீயணைப்பு வீரர்கள் 20 பேர் நடத்தினர். படகு கவிழ்ந்தால் தீயணைப்பு வீரர்கள் முதலில் காப்பாற்றுவதும், அவர்களால் முடியாத போது தேசிய பேரிடர் மேலாண்மை படையினரை அழைப்பதும், அவர்கள் விரைந்து வந்து பாதிப்புக்குள்ளானோரை காப்பது போலவும் நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ., கருணாகரன், தாசில்தார் கமலேஷ், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் செல்லப்பாண்டியன் ஒருங்கிணைத்தனர்.