மேலும் செய்திகள்
பள்ளி விளையாட்டு விழா
07-Nov-2025
மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா சமூகநலப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, சவுராஷ்டிரா பாரம்பரிய உணவுத் திருவிழா தெப்பக்குளம் நாயகி மந்திரில் நடந்தது. அமைப்பின் தலைவர் எஸ்.கே.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர். சிறந்த வேடமணிந்தவர்கள், சிறப்பாக சமைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பா.ஜ., நிர்வாகி ஏ.ஆர். மகாலட்சுமி, பேரவை நிர்வாகிகள் ஜெ.பி.சரவணன், கே.ஆர்.பாஸ்கர், சந்திரகலா, எம்.ஜி.துர்கா, எஸ்.பி.கீதாபாரதி, எஸ்.கே.பி.சந்திராபிரகாஷ், கே.ஆர்.பாலன், சி.எல்.சாரநாத், ஹரிகரன் பங்கேற்றனர்.
07-Nov-2025