உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி

மதுரை, : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது நிலத்திற்கு அருகில் வேறொருவருக்கு சொந்தமான நிலம், பம்பு செட் இருந்தது. பம்பு செட் தண்ணீரில் கழுவச் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் சோமசுந்தரத்தின் மகன் இறந்தார். திருவிடைமருதுார் போலீசார் 2017ல் வழக்கு பதிந்தனர். சோமசுந்தரம்,'மரணத்திற்கு காரணமான மின்வாரிய திருவிடைமருதுார் உதவி பொறியாளர், பம்பு செட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரரின் மகன் மின்சாரம் தாக்கி இறந்தார் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. உதவி பொறியாளரின் கவனக்குறைவால் மின் கசிவு ஏற்பட்டதை தெளிவுபடுத்த ஆதாரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சோமசுந்தரம் இறந்ததால் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் பம்பு செட் உரிமையாளருக்கு எதிராக சட்டப்படி இழப்பீடு கோர உரிமை உண்டு. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை