மாவட்ட கால்பந்து போட்டி
மதுரை: மதுரை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான லீக் கால்பந்து போட்டி லேடிடோக் கல்லுாரியில் நடந்தது.இறுதிப்போட்டியில் சீத்தாலட்சுமி பள்ளி அணி 9 - 6 கோல் கணக்கில் நல்லமணி பள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3 - 0 கோல் கணக்கில் வல்லப வித்யாலயா பள்ளியை வீழ்த்தியது.சங்கத் தலைவர் தனுஷ்கோடி, கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ பரிசு வழங்கினர். சங்க மகளிர் கமிட்டி தலைவர் சடாச்சரம், இணை துணைத்தலைவர் நியூபிகின் செல்லப்பா, அமைப்பாளர் சாந்தமீனா ஏற்பாடுகளை செய்தனர்.