உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீபாவளி புத்தாடை வழங்கல்

தீபாவளி புத்தாடை வழங்கல்

மதுரை, : தமிழ்நாடு பிராமணர் சங்க ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கும் விழா கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில தென்மண்டல தலைவர் அமுதன், மாவட்ட பொருளாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தனர். ஐம்பது பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டன. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், தம்பதியர் பூஜை, கன்னியாபூஜை நடந்தது. துணைத் தலைவர் ஜெகநாதன், இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், மகளிர் அணி ராஜம்மீனாட்சி, கல்யாணி, இணைச் செயலாளர் ரகுராம், மகளிர் அணி இணைச் செயலாளர் உமா, சித்ரா, செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ரங்கநாதன், முத்துலட்சுமி, உத்ரா, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை