உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., காங்., ஆர்ப்பாட்டம்

அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., காங்., ஆர்ப்பாட்டம்

மதுரை : அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மதுரையில் தி.மு.க., காங்., சார்பில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.நகர் தி.மு.க., சார்பில் புதுார் பஸ் ஸ்டாண்டில் செயலாளர் தளபதி தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் துவக்கி வைத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், வேலுச்சாமி, நகர் துணை தலைவர்கள் ராகவன், சின்னம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

காங்., கண்டனம்

நகர் காங்., சார்பில் கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, மீர் பாட்ஷா, கவுன்சிலர்கள் முருகன், ராஜ்பிரபாகரன், மகளிரணி நிர்வாகிகள் சானவாஸ் பேகம், மரியம் வினோலா, நளினி, அஷ்டலட்சுமி, ஹேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரயில் மறியல்21 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை ஸ்டேஷனில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுடர்மொழி உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று ஒத்தக்கடையில் அமித்ஷா உருவ பொம்மை எரிக்க முயன்ற வி.சி. கட்சியினரை போலீசார் தடுத்ததால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.நேற்று தமிழ் புலிகள் கட்சியினர் மதுரை ஸ்டேஷன் தண்டவாளத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம்

மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தனபாண்டியன், மதன், ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல், திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலுார்

தி.மு. க., நகர் செயலாளர் முகமது யாசின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேரையூர்

தி.மு.க., நகர்தலைவர் வருசைமுகமது தலைமையிலும், சேடப்பட்டியில் ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாடிப்பட்டி

சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று வி.சி.க., ரயில் மறியல் நடந்தது. மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமை வகித்தார். இதனால் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் 5 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. சமயநல்லுரர் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சரவணன், ஜெயபிரிட்டா ஆகியோர் 13 பெண்கள் உட்பட 75 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை