தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார், அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் 10 பேர் பங்கேற்றனர். துணைத்தலைவர் தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வராமல் வளாகத்தில் கூடினர்.காலியாக உள்ள கமிஷனர், பொறியாளர், கட்டட ஆய்வாளர் பணியிடங்களுக்கு உடனே அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கமிஷனர் தெரிவித்தார்.இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வந்தனர். 'நகராட்சித் தலைவர் சகுந்தலா உசிலம்பட்டி வளர்ச்சி திட்டங்களையும், நிதியையும் அரசிடமிருந்து பெற்று தராததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்' என அறிவித்துச் சென்றனர்.