உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில், நகராட்சி கடையை நடத்தி வருபவர் அம்மாசி. இக்கடையை ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், சாத்தங்குடி பாண்டியிடம், அம்மாசி, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக திருமங்கலம் நகராட்சி ஒன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிப்பாண்டி, மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் 'பெல்ட்' முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கடந்த 6ல் கடைக்கு சென்றனர். ஆறுமுகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.வாக்குவாதம் முற்றி, பலகார கடை தட்டுகளை கவுன்சிலர் காசிப்பாண்டி துாக்கி வீசி சூறையாடினார். அவருக்கு ஆதரவாக, கட்சியினர் இருந்தனர். இரு தரப்பினரும் திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்; போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
நவ 12, 2024 16:55

ரவுடிகள் நாதாரிகள் .......................... இவர்கள் தான் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் கவுன்சிலர், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்பி எனப்படும் அரசியல் வியாதிகள்


kalyan
நவ 12, 2024 14:21

கருத்து எழுதும்போது வக்கணையாக எழுத வேண்டியது. தேர்தல் தினத்தன்று வோட்டு போட செல்லாமல் இருப்பது , அல்லது பணம் குவார்ட்டர் பிரியாணி வாங்கிக்கொண்டு ரவுடிகளுக்கு ஆதரவாக ஓட்டளித்து விடுவது , பின் எப்படி அக்கிரமங்கள் ஒழியும் ?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2024 08:20

இரண்டு நாட்களுக்கு முன்னர் திரு. வைக்குண்டேஸ்வரன் என்ற போலிப்பெயர் கொண்ட கழக உறுப்பினர் திமுக ஆட்சியில் அக்கிரமங்கள் அடாவடித்தனங்கள் ஏதுமே இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருந்தார்.


Mani . V
நவ 12, 2024 05:54

ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா. பேரைப் பார், பெல்ட் முருகன், அருணாக்கொடி காசிபாண்டி. பிளடி பக்கர்ஸ்


Ms Mahadevan Mahadevan
நவ 12, 2024 05:52

திமுக ரவுடீ ஸ்ம் தமிழ்நாடு பூர உள்ளது


R. Sreenivasan
நவ 12, 2024 05:45

திராவிட மாடல் இதுதாங்க.


அப்பாவி
நவ 12, 2024 04:34

தொடை தெரிய லுங்கி கட்டிக்கிட்டு ரொம்ப கண்ணியமா நிக்காரு பாருங்க. அவர்தான் ஏரியா கவுன்சிலர். தமிழ் பண்பாடு வெளிப்படுது.


அப்பாவி
நவ 12, 2024 04:28

ரவுடிகள்தான் கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி க்களாக முடியும் .போலீஸ், சட்டம், நீதிமன்றம் அவர்களை ஒண்ணும் பண்ண முடியாது.


karupanasamy
நவ 12, 2024 04:11

கொடுக்கு வந்து சமரசம் பேசி கட்ட நீதியா கடையை கவுன்சிலருக்கு நன்கொடையா வழங்க வெச்சுடுவாடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை