பலாத்கார முயற்சி வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது
வாடிப்பட்டி: மதுரை துவரிமானை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் நாகமலையின் மகனான கருணாகரன் 31. தி.மு.க., இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். மனைவி மகள், மகன் உள்ளனர். கிராவல் மண் லாரிகள் வைத்துள்ளார். இவரது வீட்டில் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது பெண்ணும் அவரது கணவரும் வாடகைக்கு வசித்தனர். கணவர் பானி பூரி கடைக்குச் சென்ற பின் தனியாக இருக்கும் பெண்ணிடம் கருணாகரன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய துவங்கியுள்ளார். இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பக்கத்து தெருவுக்கு இடம் மாறி சென்று விட்டனர். டிச.,11 மாலை வீட்டின் மாடியில் துணி காயப்போட்டு கொண்டிருந்த அந்த பெண்ணை கருணாகரன் பலாத்காரம் செய்ய முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, தப்பிய கருணாகரன், 'உன்னையும், உன் கணவனையும் லாரி ஏற்றி கொல்வேன்' என மிரட்டிச் சென்றார். சமயநல்லுார் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விமலா, எஸ்.ஐ., கயல்விழி விசாரித்து பலாத்கார முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளில் கருணாகரனை கைது செய்தனர். இவர்மீது குற்ற வழக்குகள் உள்ளன.