ஓட்டளித்தவருக்கு துரோகம் செய்யும் கட்சி தி.மு.க., செல்லுார் ராஜூ விமர்சனம்
மதுரை, : 'ஓட்டளித்தவர்களுக்கு துரோகம் செய்யும் கட்சி தி.மு.க.,.தான்' என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.மதுரை பெத்தானியாபுரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் மேற்கு தொகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., காலத்தில் 17 லட்சம் தொண்டர்களாக இருந்த அ.தி.மு.க., ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடியாகவும், இன்று பழனிசாமி காலத்தில் 2.5 கோடியாகவும் அதிகரித்து நிலைத்து நிற்கிறது. 52 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆண்ட கட்சிதான் அ.தி.மு.க.,ஆனால் பழனிசாமி ஆட்சியில் சிறந்த வளர்ச்சிகளைக் கொடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பொய் வழக்கு போடுகின்றனர். நாங்கள் உங்கள் தந்தையையே பார்த்துவிட்டோம். நீங்கள் எம்மாத்திரம். ஓட்டளித்தவர்களுக்கு துரோகம் செய்யும் ஒரே கட்சி தி.மு.க.,தான்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதலாண்டில் 25 பேர் இறந்தனர். இந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் இநற்தனர். இதனால் மது ஒழிப்பு மாநாடு ஒரு கண்துடைப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு வரும்போது உங்களை வச்சு செய்வார்கள்.லஞ்சம் பெற்றதாக தயாளு அம்மாவிடம் சோதனை நடத்தியபோது, அறிவாலயத்தில் நீங்கள் காங்.,குடன் கூட்டணி பேசியவர்கள்தானே.மறுபிறவி என்று ஒன்று இருந்தால் கருணாநிதி குடும்பத்தில்தான் மகனாக, மகளாக பிறக்க வேண்டும். எத்தனை சொகுசாக வாழ்கின்றனர். ஜெயலலிதாக்கு குடும்பம் இல்லை. ஆனால் உறவுகள் இருந்தது. யாருக்கும் பதவிகள் வழங்கவில்லை. அதேபோலத்தான் பழனிசாமி குடும்பமும் உள்ளது. இதுதான் அ.தி.மு.க., வருங்கால சந்ததியினரை வாழ வைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்றார்.