உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., அலுவலகத்தை அகற்றுக; உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தி.மு.க., அலுவலகத்தை அகற்றுக; உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை; மதுரை தி.மு.க., நிர்வாகி ரவீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை பீ.பி.குளத்தில் தி.மு.க., அலுவலகம் உள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக்கூறி அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இது சட்டவிரோதம். அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,'ஆக்கிரமிப்பு மனுதாரரால் அகற்றப்படும்,' என தெரிவித்தார். அதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கட்டடத்தை மனுதாரர் காலி செய்து, மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டார்.நீதிபதிகள்: காலி செய்தால் போதாது. அகற்ற வேண்டும். விசாரணை பிப்.,13க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !