உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கி எறிவர்: உதயகுமார் சாபம்

தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கி எறிவர்: உதயகுமார் சாபம்

மதுரை: ''தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கி எறிவர்'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.வாடிப்பட்டி நகரி அருகே ஜெ.,பேரவை சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் 24 மணி நேரமும்பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதுடன், மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுஉள்ளனர்.முகாமை உதயகுமார்துவக்கி வைத்தார். அ.தி.மு.க., மருத்துவரணிஇணைச் செயலாளர் சரவணன், உசிலம்பட்டி டாக்டர் விஜயபாண்டியன், செவிலியர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசன், மாணிக்கம், சரவணன், ஜெ.பேரவை மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், எம்.ஜி.ஆர்.,மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.உதயகுமார் கூறுகையில், ''முதல்வராக இருந்த பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கினார். அப்போது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் அவரோ ரூ.ஆயிரம்தான் வழங்கியுள்ளார். இந்த அரசு ஜல்லிக்கட்டில் குளறுபடி செய்துஉள்ளது. 1500 ஆண்டு பழமையான ஜல்லிக்கட்டை வாடிவாசல் வழியாகத்தான் நடத்த வேண்டும். ஆனால் அரங்கம் அமைத்து நடத்துகின்றனர். மக்கள் இந்த ஆட்சியை துாக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ