மேலும் செய்திகள்
விஷம் வைத்து மயில்கள் கொலை: விவசாயிக்கு 'காப்பு'
26-Oct-2025
பேரையூர்: பேரையூர் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் வசிக்கும் தேசிய பறவையான மயிலுக்கு தெருநாய்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இவை விளை நிலங்களில் உள்ள பூச்சிகள், சிறு பாம்புகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் இப்பகுதியில் மக்கள், வெளிநபர்கள் மயில்களை வேட்டையாடவும் அவற்றுக்கு தொந்தரவும் செய்ய கூடாது என வனத்துறையினர் எச்சரித்து பாதுகாத்து வருகின்றனர். மனிதர்களால் ஆபத்து இல்லாததால் மயில்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. ஆனால் இப்பகுதியில் கூட்டமாக தெரியும் தெரு நாய்கள் மயில்களை துரத்திச் சென்று கடித்துக் குதறுகின்றன. நாய்களைக் கண்டால் வயல்களில் திரியும் மயில்கள் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றன. அவற்றில் பல மக்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் அடைகின்றன. தெருநாய்களால் மயில்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Oct-2025