உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரட்டைக் கொலை ஆயுள் தண்டனை

இரட்டைக் கொலை ஆயுள் தண்டனை

மதுரை: மேலுார் அருகே அம்பலகாரன்பட்டி அண்ணாதுரை 61, விவசாயி. இவரது மனைவிக்கும் அதே பகுதி முருகனுக்கும் 40, கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டது. முருகன் மற்றும் தடுக்க வந்த அதே பகுதி அழகப்பனை 55, 2020ல் அண்ணாதுரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். மேலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி உதயவேலவன் பிறப்பித்த உத்தரவு: அண்ணாதுரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை