| ADDED : ஜன 26, 2024 05:40 AM
மதுரை: மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்க வேண்டும் என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி வலியுறுத்தினார்.மதுரை எஸ்.எல்.சி.எஸ்.,யில் தெர்மோஜெனிக் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இதில் தலைமை வகித்து அவர் பேசுகையில், மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து கல்வி கற்க வேண்டும். ஒழுக்கத்துடன் கல்விதான் சிறந்தது. ஆரோக்கியம் காக்கும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்றார்.திருவாரூர் மத்திய பல்கலை விஞ்ஞானி ராம்ராஜசேகரன், உடல் வெப்ப ஆற்றலை அதிகப்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள், மனித உடலில் கொழுப்பின் பரிணாம வளர்ச்சி, உணவால் ஏற்படும் உடல் பலம் குறித்து பேசினார். டீன் பிரியா வரவேற்றார். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர் பேசினர். கல்லுாரி மாணவர்கள் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.