பழனிசாமிக்கு டாக்டர் சரவணன் வரவேற்பு
மதுரை: 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பயணத்திற்காக மதுரை வடக்கு தொகுதிக்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்கை யானை, குதிரை, ஒட்டகம் காட்சியுடன் டிரோன்கள் மூலம் மலர் துாவப்பட்டு அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் லேசர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. பழனிசாமிக்கு டாக்டர் சரவணன் நினைவு பரிசு வழங்கினார். இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த மாணவிக்கு லேப்டாப் மற்றும் ரூ.ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.