உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பச்சை குத்தியதால் பறிபோன கனவு: மாணவர் தற்கொலை

பச்சை குத்தியதால் பறிபோன கனவு: மாணவர் தற்கொலை

மதுரை; மதுரை, அருள்தாஸ்புரம் பாலமுருகன் என்பவரின் 17 வயது மகன் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஈரோட்டில் ராணுவத்திற்கான ஆள் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற நிலையில், கையில் பச்சை குத்தியிருந்ததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் விரக்தியடைந்து ஊருக்கு திரும்பியவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லுார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை