உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் படிக்கட்டில் டிரைவர் தற்கொலை

பஸ் படிக்கட்டில் டிரைவர் தற்கொலை

அலங்காநல்லுார் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பணியாற்றிய பஸ்சின் படிக்கட்டிலேயே டிரைவர் பாபு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளம் சங்கர் மகன் பாபு 32; ஜவுளிப் பூங்காவில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் கம்பெனி பஸ் டிரைவர். அலங்காநல்லுார் அருகே 15பி.மேட்டுப்பட்டியில் இரவில் நிறுத்தி வைத்திருந்த பஸ்சை எடுத்துச் செல்ல நேற்று காலை சென்றார்.ஆனால் குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் இவர் ஊழியர்களை ஏற்றி வராததாலும், அலைபேசியை எடுக்காததாலும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பஸ் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். பஸ்சின் பின் படிக்கட்டில் பாபு துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி மற்றும் 8, 5 வயதில் மகள், மகன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A P
அக் 19, 2024 14:36

நம்பத் தகாத இது போன்ற நிகழ்வுகளில் , முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே இருந்த உறவு குறித்து துருவித் துருவி விசாரித்தால் உண்மை வெளி வரும். மின் ஒயரைக் கடித்து ஒருவன் உயிர் விட்டதாக ஒரு நிகழ்வு நடந்ததாக செய்திகூட வந்தது . இறந்தவருக்குத்தான் உண்மை தெரிய வாய்ப்புள்ளது .


Mani . V
அக் 19, 2024 06:02

படிக்கட்டு தூக்கிட்டுக் கொள்ளும் அளவு உயரத்திலா இருந்தது? நம்பும்படியாக இல்லையே.


Mani . V
அக் 19, 2024 06:01

படிக்கட்டு தூக்கிட்டுக் கொள்ளும் அளவு உயரத்திலா இருந்தது? நம்பும்படியாக இல்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை