மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
15-Aug-2025
உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, போலீசார், போதைப் பொருள் தடுப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் வரவேற்றார். மதுரை வேர்வை வீதி கலைக் குழு ஜெயக் குமார் தலைமையில் பறை இசை, நாடகம், பாடல்கள் வாயிலாக போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொறுப்பாசிரியர் ஜெயபிரபு தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் தடுப்பு மாணவர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ்ச் செல்வம், ஜெயசீலன் ஒருங்கிணைத்தனர்.
15-Aug-2025