மேலும் செய்திகள்
நடிகர் அஜித்துக்கு வலை வீசுகிறதா தமிழக பா.ஜ.,?
08-Oct-2025
இழிவுபடுத்துவது சரியா?
04-Oct-2025
மதுரை: '' கரூர் விவகாரம் குறித்து நடிகர் அஜித் கூறிய கருத்தை வரவேற்கிறேன்'' என ம.தி.மு.க., எம்.பி., துரை கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: பீஹார் மட்டுமல்ல பின்தங்கிய பலமாநிலங்களை சேர்ந்த மக்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். உழைக்கிறார்கள்.வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பங்காற்றுகிறார்கள். இங்கு யாரையும் துன்புறுத்துவது கிடையாது. பீஹார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் கூறியது தவறானது. அவர் இதை சொல்லி இருக்கக்கூடாது. பீஹாரில் வேலை கிடைக்கவில்லை. அதனால் தான் தமிழத்திற்கு வருகிறார்கள். நம்மால் அவர்களும் பயன் அடைகிறார்கள். தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பீஹாரில் கொண்டு வந்தார்கள். தகுதியானவர்கள் ஓட்ரிமையை இழந்து இருக்கிறார்கள். அதில் நிறைய குழப்பம் உள்ளது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு பல கேள்வியை கேட்டுள்ளது. அதற்கான முழுமையான பதில்கள் இன்னும் வரவில்லை. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விடுமுறை காலத்தில் இப்பணி நடக்க உள்ளது. இதில் வீடு பூட்டிய நேரத்தில் 'ஆள் இல்லை' என ஓட்டுரிமையை பறிக்க வாய்ப்புள்ளது. கரூர் சம்பவத்தை பொறுத்தவரை கர்ப்பிணிகள், வயதானவர்கள் வரக்கூடாது என்று சொல்லியும் மீறி வந்திருக்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். நடிகர் அஜித் அதைத்தான் சொல்லி இருக்கிறார். அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறு கூறினார்.
08-Oct-2025
04-Oct-2025