உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயஷீலி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணைமுதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி நன்றி கூறினார். மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜோதி செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். இயக்குநர் பிரீட்டா கல்யாணி உட்பட பலர் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் விமலா நன்றி கூறினார். அவனியாபுரம் பி.எம்.எஸ்., வித்யாலயம் மெட்ரிக் பள்ளியில் தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், பொருளாளர் முருகன், முதல்வர் தமிழ்ச்செல்வி பங்கேற்றனர்.புதுார் மேரிஆன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் ஹேமலதா பரிசு வழங்கினார். புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் சிவகார்த்திக், ஷியாம் சுந்தர், அப்துல் ரஹ்மான், கோகுல் ராஜ் காமராஜர் பற்றி கவிதை வாசித்தனர். தமிழ் ஆர்வலர் ஆதித்தா, ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், செய்யது முகமது யூசுப், அல்ஹாஜ் முகமது பங்கேற்றனர். ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், தவுபிக் ராஜா, அசாருதீன் ஏற்பாடு செய்தனர்.திருஞானம் துவக்கப் பள்ளியில் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் பேசினார். மாணவர்களுக்கு ரோட்டரி செயலாளர் செந்திக்குமரன் பரிசு வழங்கினார். மாணவர் மன்றத் தலைவர் முகம்மது உமர் நன்றி கூறினார். ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாலா, மெர்சி, ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷர்மிளா பானு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தனர். ஆசிரியர்கள் முராத் பானு, லதா, ரமா பிரபா ஏற்பாடு செய்தனர். மாணவி சஹ்ரா நன்றி கூறினார்.மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தஸ்லீம் பானு குத்து விளக்கு ஏற்றி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை துவக்கினார். காமராஜர் படத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, ஆடிட்டர் ஐஸ்வர்யா மாலை அணிவித்தனர். ஆடிட்டர் சுரேஷ் கல்வி உபகரணங்கள் வழங்கினார். தொழிலதிபர் ஞானசிகாமணி, மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் பங்கேற்றனர்.கரும்பாலை நாடார் உறவின்முறை, இளைஞர் பேரவை, மகளிரணி சார்பில் வாகனங்களில் ஊர்வலமாக சென்று விளக்குத்துாணில் உள்ள காமராஜர் சிலைக்கு, தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், அமைப்புச் செயலாளர் அந்தோணிராஜ், மண்டல துணைத் தலைவர் வாசுதேவன், பொருளாளர் ஸ்வீட்ராஜன், மகளிரணி பாக்கியலட்சுமி, ராஜம்மா, கோகிலா மாலை அணிவித்தனர். மாலையில் நடந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் விளக்குத்துாணில் உள்ள காமராஜர் சிலைக்கு மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

திருப்பரங்குன்றம்

திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி நிகழ்ச்சியில் தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குநர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் உட்பட பலர் பேசினர். ஆசிரியை முத்துச்செல்வி நன்றி கூறினார். மாணவர் லவ கிஷோர் தொகுத்து வழங்கினார். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் காமராஜர் படத்திற்கு தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். பொருளாளர் அண்ணாமலை இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் காளிதாசன், குலசேகரன், அரவிந்தன், கிருஷ்ணசாமி, குப்புசாமி, சங்கரய்யா, பாஸ்கர் பாண்டி, துளசிதாஸ், கார்த்திக் ஆண்டவர் பங்கேற்றனர்.திருநகர் மக்கள் மன்ற விழாவில் தலைவர் செல்லா தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பிச்சுமணி வரவேற்றார். பொருளாளர் மாணிக்கராஜ் , திருநகர் நடைப்பயிற்சி நண்பர்கள் குழு நிர்வாகி சர்வேஸ்வரன் முன்னிலை வகித்தனர். உதவி தலைவர் பொன் மனோகரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் மரியாதை செலுத்தினர். நிர்வாகி புள்ளிக் குமார் நன்றி கூறினார்.

திருமங்கலம்

திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கம்பன் தமிழ் மன்றம் விழா கொண்டாடப்பட்டன. தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் சங்கரன், மாணவி ஜெயஸ்ரீ பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிளஸ் 2வில் தமிழில் நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர் கிருத்திக் சபரிக்கு முதல்வர் ஈஸ்டர் ஜோதி பரிசு வழங்கினார்.

கொட்டாம்பட்டி

மணப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, நந்தினி தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் கேசவ பாண்டியன் முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடந்தன. ஓய்வு பெற்ற ஆசிரியர் தவமணி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் ஆழ்வார் நன்றி கூறினார்.

வாடிப்பட்டி

பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் பள்ளிச் செயலர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளிக் குழு தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை முன்னாள் மாணவர் சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் ஒருங்கிணைத்தார். ஆசிரியை எஸ்தர் டார்த்தி நன்றி கூறினார்.நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னச்சாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சாந்தி, போலீஸ் எஸ்.ஐ., வேல்முருகன் முன்னிலை வகித்தனர். காமராஜர் நலச்சங்க தலைவர் ராமையா, ஆனந்த், பசும்பொன் இளங்கோ மரியாதை செலுத்தினர். பள்ளிக்கும், மாணவர்களுக்கும் காமராஜர் மன்றம் கல்வி உபகரணங்களை வழங்கியது.

சோழவந்தான்

விக்கிரமங்கலம் ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தனர். மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்கினர். செயல் தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் ராஜபாண்டியன், துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். எட்டு ஊர் கமிட்டி மூக்கன், துரைராஜ் பங்கேற்றனர்.

பேரையூர்

அத்திபட்டி ராமையா நாடார் பள்ளி விழாவில் செயலாளர் சுதந்திரசேகரன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் முத்தழகு முன்னிலை வகித்தனர். கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.

உசிலம்பட்டி

நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, தலைமை ஆசிரியர் மதன்பிரபு துவக்கி வைத்தனர். நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பரமசிவம் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.புனிதன் காமராஜர் நற்பணி மன்றம், காங்., சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜயகாந்தன், நகரத் தலைவர் காந்தி சரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினகரன், நகரச் செயலாளர் சரவணபவன், விஸ்வகர்மா நலவாரிய தலைவர் பிச்சைஆசாரி மரியாதை செலுத்தினர். தேனி ரோட்டில் வி.சி.க., சார்பில் மாலை அணிவித்தனர்.வண்ணாரப் பேட்டை நாடார் புதுத்தெருவில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப் பள்ளி பரிபாலன சபைத் தலைவர் பிரசாத்கண்ணன், செயலாளர் நடராஜன் பங்கேற்றனர். தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, அ.தி.மு.க.. நிர்வாகிகள் பூமாராஜா, துரைதனராஜ். வார்டு கவுன்சிலர் பிரகதீஸ்வரன், பா.பி. முன்னாள் கவுன்சிலர் காசிமாயன், பா.ஜ.. நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், பாலகிருஷ்ணன், விருதுநகர் நிர்வாகி ரங்கராஜா அன்னதானம் வழங்கினர்.கருமாத்துார் கிளாரட் பள்ளி விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் சுப.மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாணவி சோபியா வரவேற்றார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், பள்ளி அலுவலக உதவியாளர் கென்னடி, ஆசிரியைகள் விஜயலட்சுமி, கரோலினா காமராஜர் பற்றி பேசினர். பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற கீதாலட்சுமி, ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற கோகுல், தர்ஷிகாவிற்கு ஓய்வு உதவித்தலைமையாசிரியர் அருள்ஜோசப் பரிசு வழங்கினார்.

எழுமலை

பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பொன்கருணாநிதி தலைமை வகித்தார். முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர் காமராஜர் பற்றி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். எழுமலை விஸ்வ வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பாண்டியன், முதல்வர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.எம்.கல்லுப்பட்டி இந்து நாடார்கள் உறவின் முறை, காமராஜர் ரத்த தான அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு, டாக்டர்கள் சரவணகுமார், கவிஞர் கண்ணன், ஹரிகரன், புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். உறவின் முறை நிர்வாகிகள் அசோகன், ஞானப்பழம், மாணிக்கம், சண்முகவேல், பொன்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை