| ADDED : பிப் 22, 2024 06:25 AM
மதுரை : மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு அறிவியல், கணித உபகரணங்கள் வழங்கும் விழா சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.அவர் பேசுகையில் மாணவர்களின் கணித, அறிவியல் ஆர்வம், திறமையை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் 442 அரசு பள்ளிகளில் பயிலும் 6 -8ம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. உபகரணங்கள் பெறும் கருத்தாளர்கள் இத்திட்ட செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணனமுருகன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல்குமரன், வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மலர்ச்செல்வி, மணிமேகலை மற்றும் கருத்தாளர்கள் பங்கேற்றனர்.