நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம்
மதுரை: மதுரை மின்வாரிய மேற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரசரடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஏப்.24) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் சந்திரா தலைமையில் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.