மணி மண்டப அமைவிடம் குறித்து வலியுறுத்தல்
உசிலம்பட்டி; மறைந்த பா.பி., தலைவர் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து இடம் தேர்வு நடக்கிறது.நேற்று இந்திய மக்கள் பா.பி., நிர்வாகி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நிர்வாகிகள் போஸ், நேதாஜி, பெருங்காமநல்லுார் வீரமங்கை மாயக்காள் அறக்கட்டளை செல்வபிரித்தா, கள்ளர்நாடு அறக்கட்டளை பிரகாஷ் பங்கேற்றனர். அரசு பள்ளி பகுதிக்கு செல்லும் பகுதியில் மணிமண்டபம் அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும். பள்ளி அருகே விழாக்களை கொண்டாடுவதும் மாணவர்களுக்கு இடையூறாக அமையும். எனவே தேனி ரோட்டில் வாகனங்கள் எளிதாக சென்று வர வசதியான இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.