உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.24ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜன.24ல் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.24 காலை நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு, பட்டயம், ஐ.டி.ஐ., படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். வேலை பெற விரும்புவோரும், வேலை வழங்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.பங்கேற்க விரும்புவோர் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், ஆதார், குடும்ப அட்டை நகல்கள், போட்டோக்களுடன் ஜன.24 காலை 10:00 மணிக்கு கே.புதுாரில் உள்ள அலுவலகத்திற்கு வரவேண்டும். இங்கு வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை