மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்தி வைப்பு
10-Nov-2024
மதுரை : மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு, சர்வீஸ் ரோடுகளை ஆக்கிரமித்து பாஸ்ட் புட் கடைகள், நடமாடும் கடைகள் வியாபாரம் செய்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
10-Nov-2024