உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆக்கிரமிப்பு அகற்றம்

 ஆக்கிரமிப்பு அகற்றம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வத்தலக்குண்டு - -பேரையூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய நிலையில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் போலீசார், நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடந்த முறை மதுரை- - தேனி ரோடு விரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடைபாதை அமைத்த நிலையில் அதையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், கடைகளுக்கான படிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !