உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை (ஈ.டி.,) சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் 26ல் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் அக்.,28 ம் தேதியும், கிருஷ்ணா அக்.,29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !