உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இன்ஜினியர் தற்கொலை

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இன்ஜினியர் தற்கொலை

திருமங்கலம்: 'ஆன்லைன்' கடன் வாங்கிய இன்ஜினியர், ஆபாச டார்ச்சரால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 21, இன்ஜினியரிங் முடித்த கட்டட கான்ட்ராக்டர். மதுரையில் வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அதை முறையாக செலுத்திவந்த நிலையில், கூடுதல் பணம் வசூலிக்கும் நோக்கில், ஆன்லைனில் கடன் கொடுத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்தனர். அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் அனைத்துக்கும் அனுப்பியதோடு பெற்றோருக்கும் அனுப்பியுள்ளனர். சரவணனின் அப்பா, அவருக்குத் தெரியாமல் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு, 13,000 அனுப்பி உள்ளார். அதன் பின்னும், அந்த கும்பல், ஆபாச படங்களை அனுப்புவதை நிறுத்தவில்லை. இதில், விரக்தி அடைந்த சரவணன், நான்கு நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் புகாரில், கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை